பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.
கடந்த ஜூலை 11-ம் தேதி அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அபிஷேக்கின் மனைவி ஐஸ்வர்யா ராய், குழந்தை ஆராதயாவுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது.

அமிதாபும் அபிஷேக்கும் மும்பையில் உள்ள நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஐஸ்வர்யா ராயும் ஆராதயாவும் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களில் ஐஸ்வர்யாவுக்கு பாதிப்பு அதிகமானதால் அவரும் குழந்தையும் நானாவதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஐஸ்வர்யாவும், குழந்தை ஆராதயாவும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு குணமடைந்து வீடு திரும்பினர். ஆனால் அமிதாபுக்கு வைரஸ் பாதிப்பு நீங்கவில்லை. அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அமிதாப் குணமடைந்துவிட்டதாக கடந்த வாரம் செய்தி வெளியானது. ஆனால் அதே அமிதாப்பே ட்விட்டர் வாயிலாக மறுத்துவிட்டார். போலி செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் கண்டித்தார்.
கடந்த 23 நாள்களுக்குப் பிறகு அமிதாப் பச்சன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார். அவரது சளி மாதிரி பரிசோதனை நெகட்டிவ் என்று வந்துள்ளது. இதனை அவரது மகன் அபிஷேக் பச்சன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “எனது தந்தை அபிஷேக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். அவருக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. துரதிஷ்டவசமாக எனக்கு கொரோனா தொற்று இன்னும் நீங்கவில்லை. நான் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறேன். விரைவில் குணமடைவேன்” என்று தெரிவித்துள்ளார்.