அம்மா கோவிட்19 வீட்டு பராமரிப்பு திட்டம்

கொரோனா நோயாளிகளுக்காக அம்மா கோவிட் 19 வீட்டு பராமரிப்பு சேவை திட்டத்தை முதல்வர் பழனிசாமி கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.


இந்த திட்டத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டவர்களுக்காக அரசு சார்பில் சிறப்பு மருந்து பெட்டகம் வழங்கப்பட உள்ளது.


இதன்படி 2,500 ரூபாயில் ஒரு பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவி, ஒரு டிஜிட்டல் தெர்மா மீட்டர், 14 முகக்கவசங்கள், ஒரு கைகழுவும் சோப்பு, கபசுரக் குடிநீர் பவுடர் பாக்கெட்டுகள், 60 அமுக்ரா சூரண மாத்திரைகள், 14 வைட்டமின் சி மாத்திரைகள், 14 ஜிங்க் மாத்திரைகள், 14 மல்டி வைட்டமின் மாத்திரைகள், கோவிட் 19 கையெடு ஆகியவை அடங்கிய பெட்டகம் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *