சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் 18 வயது முதல் 45 வயது வரையுள்ள பெண்கள் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் பயன்பெறலாம். தனிநபர் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
பெண்களை குடும்ப தலைவராக கொண்ட குடும்பங்களை சேர்ந்த மகளிர், ஆதரவற்ற பெண்கள், இளம் விதவகைகள், மாற்றுத்திறனாளி பெண்கள், 35 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத பெண்கள், திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அந்தந்த மண்டல அலுவலகங்களில், அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவசமாக விண்ணப்பங்களை பெற்று உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.