அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேல் அக்டோபர் 6-ம் தேதி சென்னையில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததால் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்தார்.
கடந்த 2011-ம் ஆண்டில் ஆர்.கே. நகர் மற்றும் 2016-ம் ஆண்டில் பெரம்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எல்.ஏ-வாக தேர்வானார் வெற்றிவேல். கடந்த 2011-ம் ஆண்டு ஆர்.கே.நகரில் ஜெயலலிதா போட்டியிட வேண்டுமென்று தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அதன்பின் அதிமுக-விலிருந்து விலகி தினகரன் உடன் இணைந்தார். அமமுக கட்சியில் பொருளாளர் பதவியில் இருந்தார்.