லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அண்மையில் 3 ஆயிரம் டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியது. இதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பெய்ரூட்டில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதன்காரணமாக அந்த நாட்டு அரசே கவிழ்ந்துள்ளது.இதே அமோனியம் நைட்ரேட் ரசாயனம் சுமார் 740 டன் சென்னை துறைமுகத்தில் கடந்த 6 ஆண்டுகலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இதனால் துறைமுகத்தை ஒட்டி வாழும் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார்.இதைத் தொடர்ந்து சென்னை துறைமுகத்தில் இருந்த அமோனியம் நைட்ரேட் ஏலம் மூலம் விற்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக 400 டன் அமோனியம் நைட்ரேட் கடந்த செவ்வாய்க்கிழமை ஐதராபாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.