தடுப்பூசி காலியானது குறித்து தகவல் பலகை வைக்கப்படும்

“தமிழகத்தில் இதுவரை 1.56 கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. ஒரு குப்பியில் உள்ள தடுப்பூசியை 10 பேருக்கு போடலாம். விரயம் இல்லாமல் போட்டால் 11 பேர் வரை போடலாம்.

தமிழகத்துக்கு அடுத்து தடுப்பூசி வரும் வரை தடுப்பூசி முகாம்கள் மூடப்படுகிறது. பொதுமக்கள் நலனுக்காக, தடுப்பூசி இருப்பு இல்லை என்ற தகவல் பலகையை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு தடுப்பூசிகளை அனுப்பி வைத்த பிறகு மாவட்டங்களுக்கு உடனடியாக பிரித்து அனுப்பப்படும்” என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்துக்கான அடுத்த தவணை தடுப்பூசிகள் வரும் 11-ம் தேதிதான் கிடைக்கும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *