ஆந்திர சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவின் தனுகு சட்டப்பேரவை தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸை சேர்ந்த எம்எல்ஏ நாகேஸ்வரராவுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நாகேஸ்வரராவ் தொடர்ந்து 2 நாட்கள் பங்கேற்றார்.
அப்போது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை ஊழியர்களுடன் நெருங்கி பழகினார். அவர்கள் அனைவரும் அச்சம் அடைந்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக சிலர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆந்திராவில் தினசரி கொரோனா தொற்று ஆயிரத்துக்கும் கீழாக குறைந்துள்ளது. இந்த சூழ்நிலையில் எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.