ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை.. 18 பேர் பலி… உள்ளனர்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து ஆந்திராவின் விசாகப்பட்டினம்-நர்சாபுரம் இடையே காக்கிநாடா பகுதியில் நேற்றை கரையை கடந்தது.
இதன் காரணமாக கடலோர ஆந்திரா, தெலங்கானாவின் சில மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
ஆந்திராவிந் விசாகப்பட்டினம், காக்கிநாடா, விஜயநகரம், ஸ்ரீகாகுளம், குண்டூர் உள்ளிட்ட ஆந்திர மாநில கடலோர பகுதிகளும், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் உள்ளிட்ட சில மாவட்டங்களிலும் பலத்த காற்றோடு கன மழை பெய்தது.
இதனால், தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் சூழ்ந்தது. இதனால் மக்கள் அப்பகுதிகளை விட்டு அரசு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டனர்.
ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானா அரசு வரும் வியாழக்கிழமை வரை பொது விடுமுறை அறிவித்துள்ளது. பலத்த காற்றால் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் வங்க தேசத்து கப்பல் கரை ஒதுங்கியுள்ளது.