அங்கன்வாடி மையங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் 54,439 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் 24 முதல் அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன.
எனினும் அங்கன்வாடி குழந்தைகளுக்கான சத்துமாவு, ஊட்டச்சத்து உணவுகள் வீடு வீடாக வழங்கப்படுகிறது.
நடப்பாண்டில் அங்கன்வாடி மையங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கியுள்ளது. இதன்படி அங்கன்வாடி ஊழியர்கள் வீடு வீடாக சென்று குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.
விருப்பமுள்ள பெற்றோர் அங்கன்வாடி ஊழியர்களை தொடர்பு கொள்ளலாம்.
2 வயதுக்கு மேற்பட்ட குழந்தையை என்பதை ஊழியர்கள் உறுதி செய்து அவர்களது ஸ்மார்ட்போனில் விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். புதிதாக சேரும் குழந்தைகளின் வீடுகளுக்கு உணவு வகைகள் வழங்கப்படும் என்று ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.