மாணவர்களுக்கு மறுவாய்ப்பு.. அண்ணா பல்கலை. அறிவிப்பு…

இறுதிப் பருவத் தேர்வை எழுத இயலாத மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுவாய்ப்பை வழங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டது.

பொறியியல் கல்லூரிகளில் கடந்த செப். 22 முதல் 29-ம் தேதி வரை இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான இறுதிப் பருவத் தேர்வுகள் நடைபெற்றது. இணையவழியில் தேர்வு நடத்தப்பட்டு செயற்கை நுண்ணறிவு முறையில் கண்காணிக்கப்பட்டது.

இந்த இறுதி பருவத் தேர்வை சில மாணவர்கள் எழுதவில்லை. அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் மறுவாய்ப்பை வழங்கியுள்ளது. நவ. 17 முதல் 21-ம் தேதி வரை ஆன்லைனில் அவர்கள் தேர்வு எழுதலாம் என்று அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *