பொறியியல் கலந்தாய்வுக்கு ஜூலை 31 முதல் சான்றிதழ் பதிவேற்றம்

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு இதுவரை 1,21,008 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜூலை 31 முதல் மாணவர்கள் சான்றிதழை பதிவேற்றம் செய்யலாம். மேலும் விவரங்களுக்கு www.tneaonline.org இணையதளத்தையோ 044-22351014, 22351015 என்ற எண்களிலோ தொடர்பு கொள்ளலாம்.


வரும் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 1 வரை சான்றிதழ் சரிபார்க்கப்படும். மாணவர்கள் நேரில் வர வேண்டிய அவசியமில்லை. சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவுடன் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *