மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் திருவாரூரில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் உட்பட 12 மத்திய பல்கலைக்கழகங்களில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பட்டப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகள் செப். 15, 16, 23, 24 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளன. இதற்காக சென்னை, திருச்சி, கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, வேலூர், சேலம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.
வரும் 2-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். மேலும் விவரங்களை https://cucet.nta.nic.in இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.