இலவச தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் 2021-2022 கல்வி ஆண்டுக்கான இலவச தொழிற்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். கணினி இயக்குநர், நிகழ்ச்சி தொகுப்பாளர், குழாய் பொருத்துநர், கம்மியர் மோட்டார் வாகனம் பழுது நீக்குநர், மின் பணியாளர், எலக்ட்ரானிக் மெக்கானிக், பிட்டர் ஆகிய பயிற்சி பிரிவுகளில் 184 காலியிடங்கள் உள்ளன.
இலவச சீருடை, இலவச பஸ் பாஸ், மாதந்தோறும் ரூ.500 உதவித் தொகை, பயிற்சி முடிப்போருக்கு லேப் டாப் ஆகியவை வழங்கப்படும். மாநகராட்சி இணையதள முகவரி www.chennaicorporation.gov.in அல்லது தொழிற்பயிற்சி நிலைய இணையதள முகவரி www.gccapp.chennaicorporation.gov.in/cciti ஆகியவற்றில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையம், முத்தையா தெரு அருகில், லாயிட்ஸ் காலனி, ஐஸ் ஹவுஸ், ராயப்பேட்டை, சென்னை-14 என்ற முகவரியில் நேரடியாக சமர்ப்பித்து சேர்க்கை பெறலாம்.
பள்ளி மாற்றுச் சான்றிதழ், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் நகல் ஆகியவற்றின் அசல் சான்றிதழ்களை சேர்க்கையின்போது வழங்க வேண்டும். குழாய் பொருத்துநர் பயிற்சிக்கு 8-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் போதுமானது. மேலும் விவரங்களுக்கு 28473117 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *