பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை தூண்ட மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் திறன் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் என்ற இந்த அறிவியல் தேர்வு நவ. 30 அல்லது டிச. 5-ல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தேர்வை எழுதலாம். அவர்களில் மாவட்ட, மாநில அளவில் தேர்வாகும் மாணவர்களுக்கு உதவித் தொகை, பரிசு தொகை வழங்கப்படும். இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு http://vvm.org.in/ இணையதளத்தில் தொடங்கியுள்ளது. அக். 31 வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தப்படும்.