அரசு கேபிள் டிவியில் கூடுதல் கட்டணமா? கூப்பிடுங்க..1800-425-2911

கொரோனா வைரஸால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்த இக்கட்டான நேரத்தில் அரசு கேபிள் டிவிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.


மாதாந்திர கட்டணம் ரூ.140, ஜிஎஸ்டி வரி சேர்த்து அரசு கேபிள் டி.வி. சந்தாதாரர்களிடம் ரூ.165 வசூலிக்கப்படுகிறது. ஆனால் சில இடங்களில் ரூ.250-க்கும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி அருகேயுள்ள ஊஞ்சவேலாம்பட்டியில் மகளிர் குழு கூட்டமைப்பு குழுக்களுக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான டிராக்டரை இன்று வழங்கினார்.


இவ்வாறு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1800-425-2911 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்ட கேபிள் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *