ஆக்ஸன் சிங் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா சார்ஜா. பட்டத்து யானை, சொல்லிவிடவா திரைப்படங்களில் நடித்துள்ளார்.
கடந்த வாரம் ஐஸ்வர்யா சார்ஜாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தார்.
ஒரு வாரத்துக்குப் பிறகு கொரோனா தொற்றில் இருந்து அவர் குணமடைந்துள்ளார். இதனை இன்ஸ்டாகிராம் வாயிலாக இன்று அவர் அறிவித்தார்.
கடவுளின் அருளால் கொரோனாவில் இருந்து குணமடைந்துவிட்டேன். எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.