கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு ஆக. 1 முதல் சான்றிதழ் பதிவேற்றம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இணையதள விண்ணப்ப பதிவு கடந்த 20-ம் தேதி தொடங்கியது.

இதுவரை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது பிளஸ் 2 மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.


எனவே மாணவர்கள் ஆகஸ்ட் 1 முதல் 10-ம் தேதி வரை http://tngasa.in/ இணையத்தில் சான்றிதழை பதிவேற்றம் செய்து கொள்ளலாம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *