தமிழகத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரிகள் , அரசு தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூலை 20-ம் தேதி தொடங்குகிறது.
கலை அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngsa.in , www.tndceonline.org என்ற இணையதளத்திலும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு www.tngptc.in , www.tngptc.com என்ற இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
சந்தேகம் எழுந்தால் 044-22351014, 044-22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தனியார் கலை அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள் நேரடியாக விண்ணப்பங்களை விநியோகம் செய்யக்கூடாது. ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்ப பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளது.