சட்டப்பேரவை செப்டம்பர் 14-ல் கூடுகிறது

சட்டப்பேரவை செப்டம்பர் 14-ல் கூடுகிறது

தமிழக பேரவை கடந்த மார்ச் 6-ம் தேதி கூடியது. அப்போது துறைவாரியான மானியக் கோரிக்கைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஏப்ரல் வரை பேரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மார்ச் 24-ம் தேதியுடன் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள கலைவாணர் அரங்கம்.
தமிழக பேரவை கூட்டம் நடைபெற உள்ள கலைவாணர் அரங்கம்.

தமிழக பேரவை விதிகளின்படி அவை ஒத்திவைக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் நடைபெற வேண்டும்.

இதன்படி வரும் 14-ம் தேதி பேரவை கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை கோட்டையில் சட்டப்பேரவை செயல்படுகிறது. ஆனால் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க சட்டப்பேரவையில் போதிய இடவசதி இல்லாததால் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பேரவையை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் கலைவாணர் அரங்கில் செய்யப்பட்டு வருகின்றன.

கூட்டத்தில் முதல் நாளான 14-ம் தேதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படும். அடுத்த நாள் முதல் வழக்கமான சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *