ஆக. 22-ம் தேதி சென்னை தினம்

ஆகஸ்ட் 22-ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் மரக்கன்றுகள் நடுதல், கொரோனா தடுப்பூசி முகாம் நடத்துவது, தீவிர தூய்மைப்பணி, சுவர் ஓவியங்களை வரைவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்.
குடிசை பகுதி சுவர்களில் வரையப்பட்ட வண்ண ஓவியங்களை செல்பி எடுத்து 94451 90856 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம். இதில் சிறந்த ஓவியம் மாநகராட்சியின் ட்விட்டர் தளத்தில் பகிரப்படும்.  
மாநகராட்சி பூங்காகங்கள், நீர்நிலைகளில் உள்ள பறவைகளை புகைப்படம் எடுத்து twitter@chennaicorp-ல் பகிரலாம். சென்னை மாநகராட்சியின் அடையாளத்தை குறிக்கும் சிற்பங்களை தயார் செய்து 22-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை மாநகராட்சி தலைமையிடத்தில் உள்ள சென்னை ஸ்மார்ட் சிட்டி அலுவலகத்தில் வழங்கலாம். இதுகுறித்த தகவல்களை 94451 90856 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
சிங்கார சென்னை குறித்த ஓவிய போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டவர்கள் 20, 21-ம் தேதிகளில் பங்கேற்கலாம்.  சிங்கார சென்னை குறித்த புகைப்பட போட்டியில் 20, 21-ம் தேதிகளிலும் மாநகராட்சி கட்டிட சுவர்கள், பாலங்களில் கீழுள்ள இடங்கள் மற்றும் இதர பொது இடங்களில் மறு வடிமைக்கும் திட்ட வரைப்பட போட்டியில் 22-ம் தேதி பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு சென்னை மாநகராட்சியின் இணையதளத்தை பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *