ஆவடி அரசு பொதுமருத்துவமனை வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் கொரோனை பரிசோதனை மையம் கட்டப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஆவடி எம்எல்ஏவும் அமைச்சருமான பாண்டியராஜன் கடந்த வெள்ளிக்கிழமை திறந்துவைத்தார்.
இங்கு காத்திருப்பு அறை, உதவி மையம், ரத்த பரிசோதனை ஆய்வகம், நுண்கதிர் அறை, நோயாளிகள் படுக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.