ஆவடியில் வீட்டை தகரத்தால் அடைக்க முயன்ற மாநகராட்சி ஊழியர்கள் விரட்டியடிப்பு

ஆவடியில் வீட்டை தகரத்தால் அடைக்க முயன்ற மாநகராட்சி ஊழியர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.

ஆவடி மாநகராட்சியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

ஆவடி மாநகராட்சியின் 36-வது வார்டுக்கு உட்பட்ட பாலாஜி நகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அவரது வீட்டை தகரத்தால் அடைக்க ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்றனர். அப்போது பொதுமக்கள் திரண்டு வந்து தகரத்தால் அடைக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த 15 நாட்களாக குப்பைகள் தேங்கி கிடக்கிறது. 

அவற்றை அகற்றாமல் தகரத்தால் வீட்டை அடைக்க மட்டும் வருவது ஏன் என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

அரசு ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்களை பொதுமக்கள் விரட்டியடித்தனர். 

இறுதியில் தகரத்தால் அடைக்கும் முயற்சியை மாநகராட்சி ஊழியர்கள் கைவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *