ஆவடியில் கொரோனா ஆய்வு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக மக்களிடம் உருவாகியுள்ள எதிர்ப்பு திறனை ஆய்வு செய்ய நாடு முழுவதும் ஆங்காங்கே ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இதன்படி ஆவடி மாநகராட்சியின் 3 வார்டுகள், பூந்தமல்லி நகராட்சியில் ஒரு வார்டு, திருநின்றவூர் பேரூராட்சியில் ஒரு வார்டு என மொத்தம் 5 வார்டு மக்களை ஆய்வுக்கு உட்படுத்த திட்டமிடப்பட்டது.

இதன்படி ஆவடி மாநகராட்சி 17-வது வார்டுக்கு உட்பட்ட குறிஞ்சி தெரு, 25-வது வார்டுக்கு உட்பட்ட கணபதி கோயில் தெரு, 27-வது வார்டுக்கு உட்பட்ட தாகூர் தெரு பகுதிகளில் சுமார் 30 பேரிடம் கடந்த 21-ம் தேதி ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *