வருவாய் ஆய்வாளர் கொரோனாவால் பலி – ஆவடி மாநகராட்சி அலுவலகம் மூடப்பட்டது

சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 51) ஆவடி மாநகராட்சியின் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.


அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார்.


ஸ்ரீதரின் மரணத்தை தொடர்ந்து ஆவடி மாநகராட்சி அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்ட பிறகு வரும் ஜூலை 15-ம் தேதி ஆவடி மாநகராட்சி அலுவலகம் மீண்டும் திறக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *