ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூரில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகம் தொடர்பான ஆலோசனை கூட்டம் டிஜிபி சைலேந்திர பாபு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஆவடி காவல் ஆணையரகம், அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்தில் இருந்து இயங்கும் என்று அறிவிக்கப்பட்டது.
இதேபோல தாம்பரம் காவல் ஆணையரகம், சின்னமலையில் உள்ள தென்சென்னை இணை கமிஷனர் அலுவலகத்தில் இருந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
புதிய காவல் ஆணையரகங்களுக்கு தலா ஒரு உளவுத் துறை உதவி ஆணையர், ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐக்கள், 10 போலீஸார், 6 நிர்வாக பிரிவு ஊழியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது.