கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு அவர்களை நடமாடும் பால் முகவர்களாக ஆவின் நிறுவனம் நியமித்து வருகிறது.
முதல்கட்டமாக திருநெல்வேலி, நீலகிரி மாவட்டங்களில் ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள், பால் முகவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நலன் கருதி ரூ.10,000 ஆக இருந்த வைப்புத் தொகை ரூ.1,000 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் அந்தந்த மாவட்ட ஆவின் பொது மேலாளர் அலுவலகங்களை அணுகி விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.