கட்டிட கலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பி.ஆர்க் எனப்படும் கட்டிட கலை பொறியில் படிப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. இந்த படிப்புக்கு www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதள முகவரியில் செப். 20-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கட்டிட கலை மற்றும் திட்டமிடல் துறை அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார், சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் உள்ள பி.ஆர்க். இடங்களில் சேருவதற்கான கலந்தாய்வு நடைபெறும்.

இதில் பங்கேற்க கட்டிட கலை கவுன்சில் மூலம் நடத்தப்படும் தேசிய அளவிலான தகுதித் தேர்வு எழுதி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *