பி.எட். படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

பி.எட். படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் இளங்கலை பி.எட். பட்டப்படிப்பு சேர்க்கைக்கு  www.tngasaedu.in இணையம் வழியாக வரும் 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.500 ஆகும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.250 ஆகும். 

இணையத்தில் விண்ணப்பிக்கும்போது குழப்பம் ஏற்பட்டால் 044-22351014, 044-22351015, 044-28278791 என்ற எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *