பி.எஸ். 4 வாகனங்களை பதிவு செய்ய தடை தொடரும் உச்ச நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு

பி.எஸ். 4 வாகனங்களை பதிவு செய்வதற்கான தடை தொடரும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பி.எஸ். 4 வாகனங்களை கடந்த மார்ச் 31க்கு பிறகு விற்பனை செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அதன்பிறகும் ஏராளமான பி.எஸ். 4 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.


இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, “பி.எஸ். 4 வாகனங்களை பதிவு செய்ய ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடரும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *