சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் பணியாற்றும் அனுசுயா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு வளைகாப்பு நடத்த சக போலீஸார் முடிவு செய்தனர்.
அதன்படி உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சிம்பரமுருகேசன் என அனைத்து போலீஸாரும் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர்.
பட்டுபுடவை அணிந்து வந்த அனுசுயாவுக்கு சக காவலர்கள் வளையல்களை அணுவித்தனர். பின்னர் சீர்வரிசைகளையும் செய்தனர். பூந்தமல்லி காவல் நிலைய போலீஸார் அனவைரின் வாழ்த்து மழையால் காவலர் அனுசுயா, மகிழ்ச்சியடைந்தார்.