பார்சல் வழங்க பேக்கரிகளுக்கும் அனுமதி

பார்சல் வழங்க பேக்கரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் மே 6-ம் தேதி வியாழக்கிழமை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. உணவு விடுதிகள், ஓட்டல்கள் ஆகியவற்றில் பார்சல்களை மட்டுமே விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரையும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையும் பார்சல்களை விநியோகம் செய்யலாம்.

இதேபோல பார்சல் வழங்க பேக்கரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனிப்பு, காரம் போன்ற தின்பண்டங்களை பார்சல்களில் விநியோகம் செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *