ஏப்ரல் 3 முதல் பைக் ஊர்வலத்துக்கு தடை

ஏப்ரல் 3 முதல் பைக் ஊர்வலத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் உச்சத்தை எட்டியுள்ளது. அரசியல் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்ட பைக்குகளில் ஊர்வலமாக செல்கின்றனர். இதன்காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது.

எனவே ஏப்ரல் 3-ம் தேதி முதல் தமிழகத்தில் பைக் ஊர்வலம் தடை செய்யப்படுகிறது என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *