தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை ஏப். 29 வரை வெளியிட தடை

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை ஏப். 29 வரை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாகவும் அசாமில் 3 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறுகிறது. மேற்குவங்கத்தில் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை ஏப்ரல் 29-ம் தேதி இரவு 7 மணி வரை வெளியிட தலைமை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *