ஆபாச விளம்பரங்களுக்கு தடை

ஆபாச விளம்பரங்களுக்கு தடை விதித்து சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் ஆபாச விளம்பரங்களுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் கிருபாகாரன், புகழேந்தி விசாரித்தனர்.

“ஆபாசத்தை பரப்பும் வகையிலான கருத்தடை சாதனங்கள், பாலியல் மருத்துவங்கள், உள்ளாடைகள், சோப்புகள், ஐஸ்கிரீம், வாசனைத் திரவியங்கள் தொடர்பான விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பக்கூடாது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *