4 நாட்கள் வங்கிகள் செயல்படாது

4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று வங்கி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் இரண்டு பொதுத்துறை வங்கிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 15, 16-ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறது.

2-வது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்தம் காரணமாக தொடர்ச்சியாக 4 நாட்கள் அரசு வங்கிகள் செயல்படாது. இதன்காரணமாக பணப் பரிமாற்றம், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து விதமான வங்கி சேவைகளும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *