வட்டி மீது வட்டி.. நவ. 5-க்குள் திருப்பி அளிக்கப்படும்…

வட்டி மீது வட்டி.. நவ. 5-க்குள் திருப்பி அளிக்கப்படும்… என்று சுப்ரீம் கோர்ட்டில் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை தடுத்த கடந்த மார்ச் இறுதியில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது. இதனால் தொழில்கள் முடங்கின. லட்சக்கணக்கானோர் வேலையிழந்து, வருமானம் இன்றி தவித்தனர். 

இதைத் தொடர்ந்து வீட்டுக்கடன் உள்ளிட்ட கடன்களுக்கான தவணையை செலுத்த 6 மாதங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. எனினும் இந்த காலத்தில் அரசு, தனியார் வங்கிகள் வட்டிக்கு வட்டி விதித்தது. 

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது. மக்களின் கோரிக்கையை ஏற்று வட்டிக்கு வட்டி ரத்து செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. வட்டிக்கு வட்டியாக வசூலிக்கப்பட்ட தொகை திருப்பி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு உறுதி அளித்தது.

இதனிடையே இவ்வழக்கு தொடர்பாக ரிசர்வ் வங்கி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் வட்டிக்கு வட்டியாக வசூலிக்கப்பட்ட தொகையை வரும் 5-ம் தேதிக்குள் வாடிக்கையாளர்களுக்கு திரும்பிச் செலுத்த வங்கி, வங்கிசாரா நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *