வங்கிகளில் 100 சதவீத ஊழியர்கள் பணியாற்றுவார்கள். அனைத்து சேவைகளும் வழங்கப்படும் என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
“தமிழகத்தில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் வங்கிகளில் இனிமேல் 100 சதவீத ஊழியர்கள் வழக்கமான நேரப்படி பணியாற்றுவார்கள். வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளும் வழங்கப்படும்.
வங்கிக் கிளைகளில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” என்று மாநில அளவிலான வங்கியாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்சி மொகந்தா தெரிவித்துள்ளார்.