மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரி சக்கர நாற்காலி ஜூலை 16-க்குள் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தை சேர்ந்த தசைச்சிதைவு நோய், முதுகு தண்டுவடத்தால் பாதிக்கப்பட்ட, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கக்கூடிய மடக்கு சக்கர நாற்காலி வழங்கப்பட உள்ளது. கல்வி  பயிலும் மாற்றுத் திறனாளிகள், அலுவலகங்களில் பணியாற்றுவோர், சுயதொழில் முனைவோர் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, ரேஷன் அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட சான்றிதழ்களுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், டிஎம்எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை என்ற முகவரியில் ஜூலை 16-க்குள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை ஆட்சியர் விஜயா ராணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *