பேட்டரி வாகனங்கள் மூலம் வீடு வீடாக குப்பை சேகரிப்பு

பேட்டரி வாகனங்கள் மூலம் வீடு வீடாக குப்பை சேகரிப்பு பணி நடைபெறும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

“சென்னையின் 7 மண்டலங்களில் வீடு, வீடாக சென்று திடக்கழிவுகளை சேகரித்து, தரம் பிரித்து பல்வேறு மையங்களுக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் 4 மண்டலங்களில் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக 11 மண்டலங்களில் தனியார் பங்களிப்புடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

3 சக்கர சைக்கிள், தள்ளுவண்டி மூலமாக குப்பை சேகரிக்கும் முறை 4 மாதங்களுக்குள் முழுமையாக நிறுத்தப்படும். அதன்பிறகு பேட்டரி, மோட்டார் மூலம் இயங்கும் வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்படும்” என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *