பி.இ. துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

பி.இ. துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் செயல்படும் 461 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் 71 ஆயிரத்து 195 இடங்கள் நிரம்பின. இன்னமும் 91 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில் தமிழக பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி.டெக் மாணவர் சேர்க்கைக்கான துணை கலந்தாய்வுக்கு நவம்பர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலாளர் புருஷோத்தன் அரிவித்துள்ளார்.

12-ம் வகுப்பு சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், பொது கலந்தாய்வில் பங்கேற்க முடியாத மாணவர்கள் www.tneaonline.org மற்றும் www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 52 உதவி மையங்களையும் அணுகலாம். கூடுதல் விவரங்களுக்கு 044 22351014, 044 22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *