தமிழகத்தில் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tneaonline.org இணையதளம் வாயிலாக இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம். வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
ரேண்டம் எண் ஆகஸ்ட் 21-ம் தேதியும் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 7-ம் தேதியும் வெளியிடப்படும். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு செப். 10 முதல் 14 வரையும் பொதுப்பிரிவுக்கான முதல்கட்ட கலந்தாய்வு செப். 17 முதல் அக். 6 வரையும் நடைபெற உள்ளது.
இரண்டாம் கட்ட கலாந்தாய்வு அக். 8 முதல் 12 வரையும், எஸ்.பி. பிரிவுக்கான கலந்தாய்வு அக். 14, 15-ம் தேதிகளில் நடைபெறும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு விளையாட்டு பிரிவு மாணவர்கள் மட்டுமே நேரடியாக வர வேண்டும். மற்றவர்கள் இணையவழியில் பங்கேற்கலாம்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு உதவி மையங்களை நாடாமல் செல்போன் மூலமாக சரி பார்த்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. எனினும் கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி 52 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பு ஒரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.