பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் நவ. 23-ல் தொடக்கம்

பி.இ. முதலாம் ஆண்டு வகுப்புகள் வரும் 23-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 461 பொறியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லூரிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த அக். 1 முதல் 27-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 71,195 இடங்கள் நிரம்பின. 91,959 இடங்கள் காலியாக உள்ளன.  

“முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கான முன்பயிற்சி வகுப்புகள் நவ.9-ம் தேதி முதல் நடத்தப்படும். நடப்பு பருவத்துக்கான வழக்கமான வகுப்புகள் நவ.23-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 24-ம் தேதி வரை நடைபெறும்.

அதைத் தொடர்ந்து செய்முறைத் தேர்வு பிப். 26-ம் தேதியும் பருவத் தேர்வு மார்ச் 8-ம் தேதியுடம் தொடங்கும். வகுப்புகள் தொடங்கியதும் விரிவான தேர்வு கால அட்டவணை வெளியிடப்படும்” என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *