செப். 25-ல் பி.இ. தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார்.
“பொறியியல் சேர்க்கை (பி.இ.) கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மையை அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். அதேநேரம் சில மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்ற காலஅவகாசம் கோரியுள்ளனர்.
எனவே செப். 17-ம் தேதி வெளியாக வேண்டிய தரவரிசை பட்டியல் செப். 25-ம் தேதி வெளியிடப்படும். மாணவர்கள் tneaonline.org என்ற இணையதளத்தில் சென்று சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுவிட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
சந்தேகம் எழுந்தால் 044 22351014, 22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்” என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.