பி.இ. தரவரிசை பட்டியல் 28-ம் தேதி வெளியாகிறது
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங்கை தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் நடத்துகிறது.
விண்ணப்ப சேர்க்கை ஆன்லைன் பதிவு முடிந்து 1.60 லட்சம் பேருக்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.
கவுன்சிலிங்கில் பங்கேற்க உள்ள மாணவர்களுக்கு மதிப்பெண், இடஒதுக்கீடு விதிகளின்படி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
செப். 28-ம் தேதி தரவரிசை பட்டியலை வெளியிட திட்டமிட்டுள்ளதாக உயர் கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.