பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு

பொறியியல் படிப்புக்கான ரேங்க் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. தமிழக உயர்க்கல்வி அமைச்சர் அன்பழகன் முதல் 10 இடங்கள் பிடித்த மாணவ- மாணவிகள் பெயரை வெளியிட்டார்.

சஷ்மிதா என்ற மாணவி 199.67 கட்ஆஃப் மார்க் பெற்று முதல் இடம் பிடித்தார். நவநீத கிருஷ்ணன் என்ற மாணவன் 199.67 மார்க் பெற்று 2-வது இடம் பிடித்தார். 199.5 மார்க் பெற்று காவ்யா என்ற மாணவி 3-வது இடம் பிடித்தார்.

அக்டோபர் 1-ம்தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. 5-ம் தேதி வரை மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். அக்டோபர் 8-ம்தேதி முதல் 27-ம்தேதி வரை நான்கு கட்டங்களாக பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *