இனிப்பு வகைகளுக்கு காலாவதி தேதி கட்டாயம்

இனிப்பு வகைகளுக்கு காலாவதி தேதி கட்டாயம் என்ற நடைமுறை அமலுக்கு வந்துல்ளது.

பேக்கிங் உணவு பொருட்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதியை குறிப்பிடுவது கட்டயமாகும்.

ஆனால் சில்லறையாக விற்கப்படும் இனிப்பு வகைகளில் இதுவரை தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படுவது இல்லை.

இதன்காரணமாக சில நேரங்களில் கெட்டுப்போன இனிப்பு வகைகள் விற்கப்படுவதாக புகார்கள் எழுகின்றன.

இதை தடுக்க இனிமேல் சில்லறையாக விற்கப்படும் இனிப்பு வகைகளிலும் தயாரிப்பு தேதி, காலாவதி தேதியை குறிப்பிட வேண்டியது கட்டாயம் என்று மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நடைமுறை கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி ஒவ்வொரு இனிப்பு வகையின் விலைக்கு அருகிலேயே காலாவதி தேதியை எழுதி வைத்திருக்க வேண்டும்.

மிக குறுகிய காலத்தில் கெட்டுப் போகக் கூடிய பட்டர் ஸ்காட்ச் குல்கந்து, ரோஸ் குல்கந்து போன்ற இனிப்புகளை ஒரே நாளில் பயன்படுத்த வேண்டும்.

ரசகுல்லா, ரசமலாய் போன்ற பால் பொருட்கள், பெங்காலி இனிப்பு வகைகளை 2 நாட்களில் பயன்படுத்த வேண்டும்.

அவற்றை குளிர்சாதன பெட்டியில் ஒரு டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பராமரிக்க வேண்டும்.

நடுத்தர கால அளவு கொண்ட லட்டு போன்ற இனிப்பு வகைகளை அதிகபட்சம் 4 நாட்கள் பயன்படுத்தலாம்.

நெய் மற்றும் உலர்ந்த பழங்கள் கொண்ட இனிப்பு வகைகளை 7 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

எண்ணெய், நெய், வனஸ்பதியில் எதை பயன்படுத்தி இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டன என்பதையும் கடைக்காரர்கள் தெரிவிக்க வேண்டும்.

இந்த விதிகளை மீறுவோர் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக உணவு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *