பாரத் காஸ் மானியம் தொடரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை தனியாருக்கு விற்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுகுறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
“பாரத் பெட்ரோலியம் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்கலுக்கு சமையல் காஸ் மானியம் வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது. தொடர்ந்து மானியம் வழங்கப்படும்.
பாரத் காஸ் வாடிக்கையாளர்களை இன்டேன் அல்லது எச்பி நிறுவனங்களுக்கு மாற்றம் செய்து கொள்ளும்படி கூறுவதற்கான வாய்ப்பும், சூழ்நிலையும் தற்போது இல்லை” என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.