பிக் பாஸ் சீசன் 4 ஆட்ட களம் தயார்.. கலக்கப் போகும் நட்சத்திரங்கள் யார்?

விஜய் டி.வி.யில் இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசன்கள் ஒளிபரப்பாகி உள்ளன. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பிக் பாஸ் 4-வது சீசன் தொடங்குமா, தள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது.

நடிகை அதுல்யா ரவி


தெலுங்கு பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்கான சூட்டிங் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் நாகர்ஜுனா சூட்டிங்கில் பங்கேற்ற படங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பை பற்ற வைத்துள்ளன.

நடிகை கிரண்


இதற்கிடையில் விஜய் டிவியின் தமிழ் பிக் பாஸ் 4 நிகழ்ச்சிக்கான சூட்டிங் வரும் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபரில் தொடங்கும் என்று சின்னத்திரை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடிகை ரம்யா பாண்டியன்


சீசன் 4 நிகழ்ச்சியையும் நடிகர் கமல ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். இதில் பங்கேற்கும் நட்சத்திரங்கள் குறித்து அதிகாரபூர்வமாக இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை.

நடிகை பூனம் பஜ்வா


எனினும் நடிகை சுனைனா, அதுல்யா, ரம்யா பாண்டியன், பூனம் பஜ்வா, கிரண், ஷிவாங்கி, வி.ஜே. மணிமேகலை, டிக்டாக் புகழ் இலக்கியா ஆகியோரின் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.

டிக் டாக் இலக்கியா


விரைவில் பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கும் என்றும் காரசாரமான விவாதம், காதல், கவர்ச்சி, காமெடி, அழுகை என ரசிகர்களுக்கு பல்சுவை விருந்து படைக்கப்படும் என்று சின்னத்திரை பட்சிகள் கூறுகின்றன. ஆட்டக் களம் தயாராகிறது. அதில் களமிறங்கி கலக்கப் போகும் நட்சத்திரங்கள் குறித்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *