தெலுங்கு பிக்பாஸ்.. தமிழ் சீரியல் நடிகை…

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி ஸ்டார் இந்தியா குழுமத்தின் மா டி.வி.யில் விரைவில் வெளியாக உள்ளது. தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகர்ஜுனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளார். தெலுங்கு பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் பிரமோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை பற்ற வைத்துள்ளது.


இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதில் யாருக்கும் வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் பிக்பாஸ் சீசன் 4-ல் யார், யாரெல்லாம் களமிறங்குகிறார்கள் என்பதில் ரகசியம் காக்கப்படுகிறது.

நடிகை சுரேகா வாணி


இந்த பின்னணியில் பிரபல நடிகை சுரேகா வாணி, சீரியல் நடிகை சமீரா ஷெரீப், நடிகை யாமினி பாஸ்கர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன.


நடிகை சுரேகே வாணி தமிழ், தெலுங்கில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். சுரேகா வாணியின் கணவரும் டி.வி. இயக்குநருமான சுரேஷ் தேஜா கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

நடிகை சுரேகா வாணி

அந்த சோகத்தில் இருந்து மீண்டு வந்துள்ள அவர் மீண்டும் திரைப்படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார்.

அல்லு அர்ஜுனின் புட்ட பொம்மா, விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு 43 வயதாகும் சுரேகா வாணி குத்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களை ஆட்டம் காண வைத்தன.


அதோடு பாத் டப் புகைப்படம், கார் கழுவும் வீடியோ என அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுவதும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. பிக்பாஸில் அவர் களமிறங்குவது உறுதி என்று தெலுங்கு சின்னத்திரை வட்டாரங்கள் கூறுகின்றன.

சீரியல் நடிகை சமீரா ஷெரீப்


மற்றொரு பிக்பாஸ் போட்டியாளர் சீரியல் நடிகை சமீரா ஷெரீப். இவர் வேறு யாருமில்லை. விஜய் டிவியில் கடந்த 2016 முதல் 2019 வரை ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் சக்தியாக நடித்தவர்.

இதன்பின் கடந்த 2017 முதல் 2019 வரை ஜீ தமிழில் வெளியான ரெக்கை கட்டி பறக்குது மனசு சீரியலில் மலராக நடித்து தமிழ் மக்களின் மனதில் நங்கூரமிட்டவர்.

கடந்த 2006 முதல் 2016 வரை தெலுங்கில் ஈடிவி, ஜெமினி டிவி சீரியல்களில் நடித்து பெரும் புகழ் அடைந்தவர். 31 வயதாகும் அவரும் பிக்பாஸில் களமிறங்குகிறார்.

நடிகை யாமினி பாஸ்கர்


மற்றொரு பிக்பாஸ் போட்டியாளர் யாமினி பாஸ்கர். இவர் தெலுங்கு திரையுலகின் இளம் நடிகை ஆவார். இவரும் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவரே. கடந்த 2017-ல் தமிழில் வெளியான முன்னோடி திரைப்படத்தின் கதாநாயகிதான் யாமினி பாஸ்கர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *