பில்கேட்ஸ், ஒபாமா ட்விட்டர் கணக்குகள் மூலம் மோசடி

அமெரிக்காவின் கோடீஸ்வரர்கள், பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகள் நேற்று ஹேக் செய்யப்பட்டன.

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அமேசான் நிறுவனர் ஜெப் பெரோஸ், டெல்ஸா நிறுவனர் எலன் மாஸ்க், பாடகர் கெய்னி வெஸ்ட் உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளை ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர்.

ஜெப் பெரோஸ்


அவர்களின் ட்விட்டர் கணக்குகளில் இருந்து சில ட்விட்டுகள் வெளியிடப்பட்டன. அதாவது, நீங்கள் ஆயிரம் டாலர்களை அனுப்பினால் நாங் உங்களுக்கு 2000 டாலர்களை திருப்பி அனுப்புகிறேன்” என்று கூறப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட முகவரிக்கு பிட்காயினாக பணம் அனுப்ப கோரப்பட்டிருந்தது. இதை நம்பிய பலர் பிட்காயினாக பணம் அனுப்பினர். சில நிமிடங்களில் 75 லட்சத்து 18 ஆயிரத்து 250 பணப் பரிமாற்றம் நடைபெற்றது.

பராக் ஒபாமா


மோசடி நடைபெறுவதை கண்டுபிடித்த பிரபலங்கள் உடனடியாக ட்விட்டர் நிறுவனத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை நிறுவனம் மீட்டது. மோசடி ட்விட்டர் பதிவுகள் நீக்கப்பட்டன.


இந்த மோசடி குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்படும். எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ட்விட்டர் நிறுவன வட்டாரங்கள் உறுதி அளித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *